கோவை மாவட்டம் வால்பாறையில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை காந்திசிலை வளாகத்தில் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் திருவுருவப் படம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வால்பாறை திமுக நகர செயலாளர் பால்பாண்டி தலைமையில் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் பொதுநலன் மற்றும் சமூக சேவைகள் பற்றி புகழாரம் சூட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.