கோவை கிணத்துக்கடவில் மரக்கன்றுகள் நடவு செய்து மறைந்த நடிகர் விவேக்குக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் மரக்கன்றுகள் நடவு செய்து மறைந்த நடிகர் விவேக்குக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் மாரடைப்பால் இன்று அதிகாலை 4 35 மணிக்கு மரணம் அடைந்தார். நடிகர் விவேக் மரணமடைந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் இலட்சியமான ஒரு கோடி மரக்கன்று நடும் முயற்சி தொடரும் விதமாக ரசிகர்கள் மரக்கன்றுகளை நடவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் வளாகத்தில் கிராம நிர்வாக ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த விவேக்கின் லட்சியமான மரக்கன்றுகளை நடவு செய்து அவரது ஆத்மா சாந்தியடை செய்வது அனைவரது கடமை என்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.