திருப்பூரில் கடந்த 14ம் தேதி, குண்டாஸ் குற்றவாளியை பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் கடந்த 14ம் தேதி, குண்டாஸ் குற்றவாளியை பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் - சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்பிரபு. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி காலை பத்து மணியளவில் சாமுண்டிபுரம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர் ராம்பிரபுவை கத்தியால் குத்தியதில், மயங்கி கீழே விழுந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த 15வேலம்பாளையம் போலீசார், ராம்பிரபுவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இச்சம்பவம் தொடர்பாக தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிங் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.