வால்பாறை நகரைச் சுற்றி சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையின் முக்கிய பகுதியான வாழைத்தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தியதுடன் தற்போது கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வால்பாறை நகரின் மத்திய பகுதியான அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. இது வால்பாறை நகர மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வால்பாறை நகரை ஒட்டியுள்ள புது தோட்டம் தேயிலை தோட்ட பிரதான சாலையில் நேற்று இரவு சிறுத்தை நடமாடியது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கு படியும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல, வீட்டில் சேகரமாகும் மாமிசக் கழிவுகளை குழிதோண்டிப் புதைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.