மாரடைப்பு காரணமாக, நடிகர் விவேக் காலமானார் ..!
சென்னை: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார்.
சென்னையின் சாலிகிராமத்தில் உள்ளவீட்டில் இருந்த அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, 59 வயதாகும் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் எக்மோ கருவியின் மூலம் தான் சுவாசித்து வருவதாகவும்மருத்துவனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. திரைத்துறையில் பலரை தன் நகைச் சுவையால் சிரிக்க வைத்த "சின்ன கலைவாணர்" என்று அனைவராலும் அழைக்கபடும் விவேக்கின் மரணம் திரைத்துறையினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.