தேர்தல் விதிமீறல்: வால்பாறை நகராட்சி ஆணையர் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு

கோவை: வால்பாறை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த பவுன்ராஜ், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக பிரமுகருக்கு 12 கோடி மதிப்பிலான ஏலத்தை வழங்கி அதன் மூலமாக கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றுள்ளார், என முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். புகாரின் அடிப்படையில், அவரை பணி மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


கோவை: வால்பாறை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த பவுன்ராஜ், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக பிரமுகருக்கு 12 கோடி மதிப்பிலான ஏலத்தை வழங்கி அதன் மூலமாக கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றுள்ளார், என முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். புகாரின் அடிப்படையில், அவரை பணி மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பவுன்ராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வால்பாறை நகராட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலர்களை வெளியே அனுப்பி விட்டு, பவுன்ராஜின் அறையை சோதனை செய்தனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 14 |2021, 408 420 ஆகிய சட்டப் பிரிவின் கீழ் பவுன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றன. ஆனால், பவுன்ராஜ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது, போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக பிரமுகருக்கு 12 கோடி மதிப்பிலான ஏலத்தை வழங்கி அதன் மூலமாக கோடிக்கணக்கில் கமிஷன் பவுன்ராஜ் பெற்றுள்ளார். இது தேர்தல் விதிமீறல் ஆகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த மனுவின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போலீசார் ஆய்வில் ஈடுபட்டபோது இவர் குற்றத்தில் ஈடுபட்ட அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வால்பாறையில் உள்ள நகராட்சியில் நேற்று புதிய ஆணையாளராக பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்துவந்த காந்திராஜன் பொறுப்பேற்றார். மேலும், அவர் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் சமந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் என்றும் ஆய்வின் முடிவில் தான் குற்றத்தின் முழு தன்மையும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...