நகை கடையில் பணம் கையாடல் செய்த கேஷியர் தலைமறைவு!

கோவை: தான் வேலை பார்த்த நகைக்கடையில் பணத்தை கையாடல் செய்த கேஷியரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தான் வேலை பார்த்த நகைக்கடையில் பணத்தை கையாடல் செய்த கேஷியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள நகைக்கடையில் கல்வீரம்பாளையம் விஜய் நகரை சேர்ந்த பாபு ராஜன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கேஷியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நகைக் கடையில் விற்பனையாகும் பணத்தை விட பாபு ராஜன் கணக்கு காண்பிக்கும் பணம் குறைவாக இருந்ததாகத் தெரிகிறது

இதையடுத்து நகைக்கடையின் மேலாளர் ஸ்டான்லி மேத்யூ, பாபு ராஜனை கண்காணித்து வந்தார். பாபு ராஜன் பணத்தை கையாடல் செய்தது உறுதியானது.

இதுகுறித்து பாபு ராஜனிடம் ஸ்டான்லி மேத்யூ கேட்டார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் கடைக்குவருவதை நிறுத்திக் கொண்டார்.

பாபுராஜன் ரூ. 51450 வரை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலாளர் ஸ்டான்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கையாடல் செய்த பாபுராஜை தேடி வருகின்றனர்

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...