தந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் அண்ணியை கொல்ல முயன்றதாக கைது!

கோவை: தந்தையைக் கொன்று ஜாமீனில் வெளியே வந்தவர், அண்ணியை கொடூரமாக கொல்ல முயன்றதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: தந்தையைக் கொன்று ஜாமீனில் வெளியே வந்தவர், அண்ணியை கொடூரமாக கொல்ல முயன்றதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சரவணம்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரவேல் (32) வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த ஆண்டு தந்தை கிருஷ்ணனிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். தந்தை பணம் தராததால் ஆத்திரமடைந்த குமாரவேல், கட்டையை எடுத்து தந்தையின் தலையில் அடித்து கொலை செய்தார்.

சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமாரவேல் ஜாமீனில் வெளியேவந்தார். அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். அவரின் அண்ணன் சக்திவேலுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். தனக்கு தனியாக சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் வேண்டும் என கேட்டு கடந்த சில நாட்களாக அண்ண்னுடன் தகராறு செய்து வந்தார்.

இது குறித்து பேச நேற்று மோட்டார் சைக்கிளில் அண்ணன் வீட்டுக்குச் சென்றார். அங்கு இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அண்ணன் மனைவியுடனும் இது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த குமாரவேல் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து அண்ணியின் தலையில் ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து விட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன், மனைவி மீது பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்தார். அவரது குரல் கேட்டு அக்கம்பக்கத்தினரும் உதவிக்கு வந்தனர். படுகாயம் அடைந்த குமாரவேலின் அண்ணி சிந்து கோவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரவேலை கைது செய்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...