கோவை: இந்த ஆண்டுக்கான ஆலை அரவைக்கு போதுமான கரும்பை வழங்கும்படி விவசாயிகளுக்கு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கோரிக்கை விடுத்துள்ளது.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பல்வேறு நிர்வாக குளறுபடிகளால் கரும்பு அரவை குறைந்து விட்டது.
இந்த ஆண்டு ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆலைக்கு கரும்பு வழங்க குறைந்த அளவு விவசாயிகளே முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆலை நிர்வாகம் விடுத்துள்ள வேண்டுகோளில், “இதுவரை 3500 ஏக்கர் அளவிலான கரும்பு மட்டுமே அரவைக்கு தருவதாக ஆலையுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். அரவை திறன் குறைந்தால் அது நஷ்டமான ஆலை எனக்கருதி மத்திய அரசு கைவிட வாய்ப்புள்ளது.

இரண்டு லட்சம் டன் அரவை திறன் கொண்ட இந்த ஆலையில் இந்த ஆண்டு ஒரு லட்சம் டன் அரவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆலைக்கு தங்களது கரும்பை வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு கரும்புக்கான பணத்தை கோவை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,900 வரை வழங்கப்படும்,” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.