கோவை: மூலப்பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என மத்திய அரசுக்கு தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்க(சீமா) தலைவர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இந்திய பம்ப்செட் நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி உள்ள நிலையில், கோவை பம்ப்செட் நிறுவனங்களின் பங்களிப்பு, 6,500 கோடியாக உள்ளது. கோவையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது பம்ப்செட் நிறுவனங்கள் மூலப்பொருள் விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வது கடினமாக உள்ளது.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மூலப்பொருட்கள் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நடப்பு மூலதனம் பற்றாக்குறை ஏற்பட்டு, திட்டமிட்ட உற்பத்தி இலக்கை அடைய முடியாமல் நஷ்டத்தில் இயங்குகின்றன. பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்துதரும் நிறுவனங்களின் நிலையும் மோசமாக உள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும், 90 சதவீத பம்ப்செட்கள் கோவையில் உள்ள எம்.எஸ்.எம்.இ.,களால் உற்பத்திசெய்யப்படுகின்றன. அதிகம் விற்பனையாகும் பம்ப்செட் களின் உற்பத்தி செலவு, 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
உற்பத்தியாளர்கள் அதிகபட்சம், 12 சதவீதம் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் உயர்த்தியுள்ளனர். மூலப்பொருட்களின் விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளதால் உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பெரும் நஷ்டம் அடைகின்றன.
மத்திய அரசு ஸ்டீல் மற்றும் இரும்புத் தாது போன்ற பொருட்களின் இறக்குமதியை அனுமதித்து ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். மூலப்பொருட்களை பதுக்குவோர், செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தும் ஸ்டீல் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு 20 சதவீத நடப்பு மூலதன கடன் அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.