கோவை: முள்ளுப்பாடி மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கும் படி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை: முள்ளுப்பாடி மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள 27 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்து நான்கு வழி கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது
மேலும் விழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் நீளமான மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் முள்ளுப்பாடி ரயில்வே கிராசிங்கில் ரயில்வே துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரும்பு மேம்பாலம் போடப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலம் பகல் நேரத்தில் பளிச்சென்று தெரிந்தாலும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்ட இரும்பு மேம்பாலத்தில் மின் விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. மின் விளக்குகள் பொருத்தி இரவு நேரத்தில் ஜொலிக்கும் மேம்பாலம் ஆக மாற்ற வேண்டும் என அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.