கோவை: பர்தா அணிந்து பாருக்கு மது குடிக்க வந்த இளைஞர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் பர்தா அணிந்த ஒருவர் மதுபானம் வாங்கினார். டாஸ்மாக் கடையில் இருந்தவர்கள் சந்தேகத்தில் அவரை விசாரித்தபோது அவர் பெண்ணில்லை ஆண் என்பது தெரியவந்தது.
பர்தா உடையில் இருந்த அந்த நபர், தான் ஏற்கனவே திருமணமான பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டதாக கூறி உள்ளார்.
சொந்த ஊர் திருச்சி என்றும், அந்தப் பெண்ணை கணவர் கோவை அழைத்து வந்து விட்டதாகவும், அந்த பெண்ணை தேடி கோவை வந்ததாகக் கூறி உள்ளார்.
பெண்ணின் தந்தை தன்னை பின் தொடர்ந்து வந்ததால் தப்பிப்பதற்காக பர்தா அணிந்ததாகக் கூறியுள்ளார். எனினும் அந்த நபர் சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.