தடுப்பு சுவர் இடிந்தது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்கள் குழு ஆய்வு செய்யும்!

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்கள் குழு ஆய்வின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்கள் குழு ஆய்வின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை மாநகராட்சி ஆணையர்,

“கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ஸ்மாட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ 8 குளங்களை புனரமைப்பு செய்ய ரூ.320 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில்‌ ரூ.62.17 கோடி மதிப்பில்‌ பெரிய குளத்தின்‌ தெற்கு பகுதி குளக்கரையினை புனரமைப்பு செய்ய கதிர்வேல்‌ & கோ ஓப்பந்ததாரர் நிறுவனத்திற்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

பெரியகுளம்‌ தெற்கு பகுதியின்‌ எல்லை பகுதியில்‌ தற்காலிகமாக கட்டப்பட்டு வந்த செங்கல்‌ கட்டிடத்திலான 75 அடி தடுப்புச்சுவர்‌ மண்‌ மற்றும்‌ மழை நீர்‌ சேர்ந்து இருகிய காரணத்தினால்‌ நேற்று (15.04.2021) அதிகாலை சரிந்து விழுந்தது.

இது குறித்து பொறியாளார்கள் ஆய்வு செய்ததில் தெற்கு பகுதியில்‌, உள்ள தனியார்‌ காலியிடத்திற்கும்‌ திட்ட பணி செய்யும்‌ இடத்திற்கு உண்டான எல்லை வரையறை தெளிவாக அறியப்படாததால்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ மூன்றாம்‌ நபர்கள்‌ அத்துமீறி நுழைவதை தடுக்க,திட்டப்பணிகளில்‌ எந்தவித இடையூறுகள்‌ ஏற்படாத வண்ணம்‌ தற்காலிகமாக செங்கற்களால் ஆன தடுப்புச் சுவர் ஏற்படுத்தப்பட்டதாக அறியப்பட்டது.

இந்த தடுப்பு சுவா என்ன காரணத்தினால்‌ சரிந்து விழுந்தது என்பதை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ கட்டிடவியல்‌ துறையின்‌ தொழில்நுட்ப வல்லுநுர்‌ குழுவினை நியமனம்‌ செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தருவதன் அடிப்படையில் தொழில்நுட்ப தவறுகள்‌ கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு காரணமான ஓப்பந்ததாரர்‌ நிறுவனம்‌, திட்ட மேற்பார்வை ஆலோசக நிறுவனத்தார்‌ மற்றும்‌ களப்பொறியாளார்கள்‌ மீது தக்க மேல்நடவடிக்கை எடுக்கப்படும்‌.

தற்போது இடிபாடுகள்‌ முற்றிலும்‌ அகற்றப்பட்டு சரிந்து விழுந்த தடுப்பு சுவருக்குப் பதிலாக புதியதாக கான்கிரீட்டிலான சுவர்‌ எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட கூடுதல்‌ செலவினங்களுக்கு ஒப்பந்ததாரர்‌ மற்றும்‌ திட்ட மேலாண்மை கலந்தாலோசக நிறுவனம்‌ பொறுப்பேற்க வேண்டும்,” என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...