பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பொள்ளாச்சி நகராட்சியில் 12 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 11 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 6 பேருக்கும் என மொத்தம் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட இடங்களில் சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வாரமாகவே பொள்ளாச்சி நகர் பகுதிகளில் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
எனவே, சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளனர். மேலும் பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.