'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' குறித்து விழிப்புணர்வு இல்லாததால் வணிகர்கள் நிதி இழப்பு!

கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' குறித்து விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் வணிகர்கள் தங்களது கிரெடிட் தொகையையும் சேர்த்து செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.



கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' குறித்து விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் வணிகர்கள் தங்களது கிரெடிட் தொகையையும் சேர்த்து செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மத்திய ஜிஎஸ்டி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், " ஜிஎஸ்டி திட்டத்தின் கீழ் தொழில்துறையினர் மூலப் பொருட்கள் வாங்க செலவிடும் தொகைக்கு 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' எடுத்து கொள்ளலாம். 

உதாரணமாக ஆயிரம் ரூபாய்க்கு ஒருவர் மூலப் பொருட்களை வாங்கி பொருள் தயாரித்து அதை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பொழுது ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் என்ற வீதம் வரி செலுத்த வேண்டும். 2,000 ரூபாய்க்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும். 

ஆனால் 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' மூலம் மூலப் பொருட்களுக்கான வரியை கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. இந்த இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுப்பதற்கு ஒரு கால அளவீடு உள்ளது. 

எக்காரணம் கொண்டும் அந்த காலக்கெடுவுக்குள் பின் இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுக்க முடியாது இது குறித்த விழிப்புணர்வு தொழில் துறையினர் மத்தியில் குறைவாக உள்ளது.

தொழில் நிறுவன அதிபர் ஒருவருக்கு 2017- 18 ல் ரூ.20 லட்சம் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வந்துள்ளது. 2018 -19ல் ரூ.30 லட்சம் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வந்துள்ளது. 2019- 20ல் ரூ.40 லட்சம் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வந்துள்ளது. எனவே மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து ரூ 90 லட்சம் 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' போக மீதம் ரூ. 50 லட்சம் மட்டும் அவர் ஜிஎஸ்டி செலுத்தினால் போதும் என்று நினைத்துள்ளார். 

ஆனால் நாங்கள் ஆய்வு செய்த பின், அவரிடம் செலுத்த வேண்டிய தொகை ரூ.1. 40 கோடி என்று கூறியபோது அவர் அதிர்ந்து போனார். 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' ரூ. 90 லட்சம் போக மீதமுள்ள தொகையை தானே நான் செலுத்த வேண்டும் என்று கேட்டார். 

நாங்கள் அவரிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாண்டுகள் கழித்து மொத்தமாக எல்லாம் எடுக்க முடியாது என்று கூறினோம். ஆனால் அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. 

ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்கள் 'GSTR-3b' ரிட்டன்ஸ் உரிய நேரத்தில் சமர்ப்பித்தல் அவசியம். அடுத்த நிதியாண்டு சமர்ப்பித்து கொள்ளலாம் என்று விழிப்புணர்வின்றி செயல்பட்டால் 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' எடுக்க முடியாது. 

இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மூன்று ஆண்டுகளாக gstr-3b ரிட்டன்ஸ் பைல் செய்யாமல் மொத்தமாக சமர்ப்பிக்கும் போது இதுபோன்ற பிரச்சினையை எதிர் கொண்டுள்ளார் என்பதும் இவரைப் போன்று பல தொழில் முனைவோர் மாவட்டம் முழுவதும் இவ்வாறு விழிப்புணர்வின்றி செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. 

தவறான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம். இந்த தொழிலதிபர் போன்றே கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழில் முனைவோர் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொழில்துறையினர் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை ஜிஎஸ்டி அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடும் நிதி நெருக்கடி பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் "என்று கூறினர். 

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...