சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும், என தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய நாள் அதாவது ஏப்ரல் 22ம் தேதி கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.