கோவை: கோவையில் தேர்தல் நாளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காததை கண்டித்து சமூகநீதிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
கோவை: கோவையில் தேர்தல் நாளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காததை கண்டித்து சமூகநீதிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு பணி வழங்கப்பட்டது.
தேர்தல் முடிந்து பத்து நாட்கள் ஆகியும் இதுவரை அவர்களின் தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்காமல் இருப்பது மற்றும் தேர்தல் நாள் அன்று மற்ற அரசு அதிகாரிகளுக்கு உணவு வழங்கிய போதும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதாமாதம் உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் ஒப்பந்ததாரர்கள் இழுத்தடித்து கொடுப்பதால் வறுமையில் வாடும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை தடுக்க கோரியும் சமூக நீதிக் கட்சியின் மாநில தலைவர் ந.பன்னீர்செல்வம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.