கோவை: கோவை மாநகரில் கூடுதலாக நான்கு காவல் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாக, காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.

கோவையில் மாநகரில் 15 காவல் நிலையங்கள் உள்ளன. அதேசமயம், தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகரில் கூடுதலாக நான்கு போலீஸ் ஸ்டேஷன்களை அமைக்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாக, காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ''பீளமேடு, சிங்காநல்லூர், சரவணம்பட்டி, போத்தனுார் ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் பிரிக்கப்பட்டு, கூடுதலாக அந்தந்த பகுதிகளில், 4 போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க, தமிழக டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதலுக்கு, இந்த பரிந்துரை அனுப்பப்பட்டு, புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவித்தார்.