சிட்கோ தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

கோவை: கோவை சிட்கோ தொழில் வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 300 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.



கோவை: கோவை சிட்கோ தொழில் வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 300 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழுமையான ஊரடங்கு கொண்டு வரப்படுமோ என்ற அச்சத்தில் கோவையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகினர்.

இதனால் கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்துடன் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன்படி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.



அதன் ஒரு பகுதியாக கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கியது.



சிட்கோ தொழில் மையம், மாவட்ட தொழில் மையம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சிட்கோவில் உள்ள கொசிமா அரங்கில் நடந்த முகாமில் முதல் நாளில் 233 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.



மேலும் இன்று முதல் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், போதுமான தடுப்பூசி இருப்பு இல்லாததால், 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் சிறிய தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் உரிமையாளர்கள் வாயிலாக கொசிமா சங்கம் மூலம் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...