கோவை: பொள்ளாச்சி அருகே மதுப்பழக்கத்தில் இருந்து மீள முடியாததால் விரக்தியடைந்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம், ஆவலப்பம்பட்டி யைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலி வேலை செய்து வருகிறார் .இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சுந்தர்ராஜன் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வருவதால் 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி மகன்கள் தனியாக சென்று விட்டனர். இதனால் மன விரக்தியுடன் மது குடித்துக்கொண்டே இருந்த சுந்தர்ராஜன் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுக்கு அடிமையானதால் தனது குடும்பத்தையும் பிரிந்து மன விரத்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.