கோவை: கோவையில் தங்களுடன் பணியாற்றி விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு சக போலீசார் ஒன்றிணைந்து நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சி சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் முதல்நிலைக் காவலர் இவர் சென்னை திருவான்மையூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். 2010ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, இவருடைய 2010ம் ஆண்டு பணியில் ஒன்றாக சேர்ந்து தற்போது கோவை உள்பட மாநிலம் முழுவதும் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் போலீசார் ஒன்றிணைந்து 12 லட்சம் ரூபாய் நிதி திரட்டி நிதியை மதுரை செக்கானூரணியில் உள்ள மருது பாண்டியின் தாய் தந்தை மற்றும் மனைவியிடம் வழங்கினார்.
இதேபோன்று, சேலம் மாநகர போலீசில் மோப்பநாய் பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த போலீஸ்காரர் வரதராஜன் என்பவரும் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இவருக்கும் சக போலீஸ்காரர் ஒன்றிணைந்து 11 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் சேர்த்து சேலம் சுக்கம்பட்டியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சி சம்பவத்தை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.