பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சிறப்பு முகாம்கள் வாயிலாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

கொரோனா தொற்று பரவலை தடுக்க வருவாய் துறை, சுகாதாரத் துறையினர் பல்வேறு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை சார்பில் பொள்ளாச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள 500 க்கும் மேற்பட்டோருக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று சார் ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்தார்.