கோவை: கோவையில் உள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் உள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
எனவே, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமின்றி கொடிசியா வளாகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வசதிகளும் போதாதபட்சத்தில் கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில், “கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும், 2 மீட்டர் சமூக இடைவெளி அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.200, ரூ.500 அபராதம் விதிக்கப்படும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.