திருப்பூரில் உயர் மின் கோபுரம் அமைக்க ஆய்வு செய்ய வந்த பவர்கிரிட் அதிகாரிகள், போலீசாரிடம் விவசாயிகள் வாக்குவாதம்!

திருப்பூர்: திருப்பூரில் உயர் மின் கோபுரம் அமைக்க ஆய்வு செய்ய வந்த பவர்கிரிட் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் உயர் மின் கோபுரம் அமைக்க ஆய்வு செய்ய வந்த பவர்கிரிட் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் , தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் கொண்டு செல்வதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டு பணிகள் முடிவடைந்து தற்போது உயர் மின் கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மீண்டும் அதே கிராமத்தில் மாற்று வழியாக மீண்டும் ஒரு உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை இன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் தலைமையில் பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் துவக்கினர். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் மற்றும் பவர்கிரிட அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏற்கனவே விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் அளவீட்டு பணிகள் முடிவடைந்து, உயர்மின் கோபுர பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் விவசாய விளை நிலத்தில் எதற்காக அளவிட்டு பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது என அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே விவசாய விளைநிலங்கள் இழந்த நிலையில் மீண்டும் நிலத்தை இழக்க முடியாது எனவும் அளவீட்டு பணியை செய்ய விடமாட்டோம் என கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், கண்டிப்பாக எங்கள் பகுதியில் அளவீட்டு பணிகள் செய்யக்கூடாது என விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் பல்லடம் டி.எஸ்.பி ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...