கோவையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், அன்னூர் போலீசாரும், நேற்று முன்தினம் இரவு அன்னூர் அடுத்த சொக்கம் பாளையத்தில், ஒரு தோட்டத்து குடோனில், அதிரடி சோதனை நடத்தினர்.
தவிடு விற்பனை செய்து வரும் அந்த குடோனில், ரேஷன் அரிசி, தலா, 50 கிலோ எடையுடன், 280 மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, 14 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணன் (40) லாரி டிரைவர் சரவணகுமார்(33) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.
மேலும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பல மாதங்களாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அவற்றை கேரளாவுக்கு கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.