கோவை: கோவை மாவட்டம் உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டு செல்கிறது. அதனால், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழில் செய்யக்கூடியவர்கள், நகை பட்டறை தொழிலாளர்கள் உட்பட பலரை அழைத்து கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்விற்கு, உதவி ஆணையர் திருமேனி தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போலீஸ் துணை ஆணையர், சட்டம் ஒழுங்கு ஸ்டாலின் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.