கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதனால் அன்றாடம் பயணிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மேகம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு வந்தது. இது குறித்து நேற்று வெளியான வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என கூறியிருந்தனர்.
அதன்படி, கோவையில் தொடர்ந்து மேகமூட்டமாக இருந்து வருவதும், பிறகு கலைந்து செல்வதாக இருந்தது. திடீரென மாலை 7 மணி அளவில் இடியுடன், சாரல் மழை பெய்யத் துவங்கியது. குறிப்பாக, கணபதி, சரவணம்பட்டி, டெக்ஸ் டூல் பாலம், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, சலிவன் வீதி லாலி ரோடு, வடவள்ளி, உக்கடம், சிங்காநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து வெப்பத்தின் தாக்கத்தில் தவித்து வந்த கோவை மக்கள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.