கோவை: கோவை வடவள்ளி பகுதியில் வசிக்கக்கூடிய விவசாயக் கல்லூரி பேராசிரியருடைய வீட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை மருதமலை சாலையிலுள்ள விவசாய கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தன் வயது 45. இவருடைய வீடு வடவள்ளி சிறுவாணி ரோடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தன்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்தாருடன் திண்டுக்கல்லுக்கு சென்றிருந்த ஆனந்தன், இன்று மாலை தமிழ் புத்தாண்டு என்பதால் கோவைக்கு திரும்பினார்.

இன்று, வீட்டை திறந்து உள்ளே பார்த்தபோது வீட்டின் போர்டிகோ ஜன்னலை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர், பீரோவில் இருந்த 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சிக்கிய ல ஒரு சில கைரேகைகளை, போலீஸார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். அதேபோல வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும், தெருவில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் வடவள்ளி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.