கோவை: கோவை - ஷார்ஜா இடையே 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில், திங்கள், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படுகிறது. விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் தவிர்த்து, 168 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமானம் இந்த சர்வீசுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 80 பயணிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்து வந்தனர். தற்பொழுது, சேவை வழங்கப்படும் 5 நாட்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக தொடர்ந்து பறந்து வருகிறது 'ஏர் அரேபியா' விமானம்.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "பொதுவாக வணிகர்கள் தான் அதிக எண்ணிக்கையில் ஏர் அரேபியா விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்பு வணிகர்கள் ஷார்ஜாவுக்கு சென்றால் குறைந்தது ஒரு வாரம் கழித்து தான் திரும்பி வருவது வழக்கம். ஆனால், தற்பொழுது நோய்த் தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் இன்று புறப்படுவோர், ஓரிரு நாட்களிலேயே மீண்டும் தங்களது பணியை முடித்து கோவைக்கு திரும்பி வருகின்றனர்.
சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் கோவையிலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 'ஏர் அரேபியா' நிறுவனம் மட்டுமே சர்வதேச பிரிவில் விமான சர்வீஸ் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது."
இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.