கோவை: கோவை மாவட்டம் கே.ஜி சாவடி அருகே உள்ள மாரிசெட்டி வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்ற சச்சின் வயது 35. குனியமுத்தூர் பகுதியில் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வரும் இவர், இந்து மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.

நேற்று மாலை குனியமுத்தூரில் கடையை மூடிவிட்டு பாலக்காடு ரோடு வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, குனியமுத்தூர்-பாலக்காடு சாலையில் கே.ஜி சாவடி பகுதியில் உள்ள மயில்கல் என்ற இடத்தை அடுத்துள்ள காந்திநகர் என்ற பிரிவில், இவரை இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மோட்டார் சைக்கிளில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், பாலகிருஷ்ணன் நேரடியாக மதுக்கரை காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். உடனடியாக, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு தாக்க முயற்சி நடந்துள்ளதா? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.