விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் 72 மணி நேரத்துக்குள் எடுத்த பிசிஆர் பரிசோதனை முடிவுகளை தங்களிடம் வைத்திருக்க வேண்டும்.

கோவை: இந்திய முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக, கோவை விமான நிலையத்தில் தற்பொழுது உள்நாட்டு பிரிவில் மட்டுமே அதிக சேவை வழங்கப்படுகிறது. வெளிநாட்டு பிரிவில் ஷார்ஜாவுக்கு மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு அங்கு நடைமுறைப்படுத்தப்படும் நோய்த்தொற்று தடுப்பு வழிமுறைகள் குறித்து சரிவர தகவல் தெரிவிக்கப்படாத காரணத்தால், பெரும்பாலான பயணிகள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில்:
கோவை விமான நிலையத்தில் விமான இயக்கம் மற்றும் விமான நிலைய பராமரிப்பு உள்ளிட்டவை மட்டுமே விமான நிலைய ஆணையகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. நோய்த்தொற்று தடுப்பு கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மாநில சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் பரிமாற்றம் சரிவர இல்லாத காரணத்தால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் 72 மணி நேரத்துக்குள் எடுத்த பிசிஆர் பரிசோதனை முடிவுகளை தங்களிடம் வைத்திருக்க வேண்டும். தவிர உள்நாட்டு விமானப் போக்குவரத்து பிரிவில் பயணிப்பவர்கள் என்றால் 'இ- பாஸ்' கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
கோவையில் இறங்கிய பின் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதன் தன்மைக்கேற்ப சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அறிகுறிகள் தாக்கம் அதிகம் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். விமான நிலையத்தில் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் உடல் வெப்ப பரிசோதனையை வெற்றிகரமாக கடந்து அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் விமான பயணிகள் எவ்வித தடையும் இன்றி தங்களது பயணத்தை தொடரலாம். ஆனால், தற்போது விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய ஆணையகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுவே தற்போது நிலவும் குழப்பத்திற்கு தீர்வாக அமையும்.
இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.