கொரோனா பரவல்: நியூசிலாந்து உள்பட நான்கு நாடுகளுக்கான சர்வதேச தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

நியூசிலாந்து உள்பட நான்கு நாடுகளுக்கான சர்வதேச தபால் சேவையை தபால்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.


கோவை: நியூசிலாந்து உள்பட நான்கு நாடுகளுக்கான சர்வதேச தபால் சேவையை தபால்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்திய தபால்துறை, சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் சேவையை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு நாடுகளுக்கு தபால்களை அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால், நியூசிலாந்து, லக்சம்பர்க், மங்கோலியா, செர்பியா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.

இதனால், இந்த நாடுகளுக்கான அனைத்து வகை தபால் முன்பதிவையும் தபால்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் தபால்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...