கோவை அன்னூர் அருகே சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம் ஐ உடைத்து திருட முயன்ற போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
கோவை: கோவை அன்னூர் அருகே சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம் ஐ உடைத்து திருட முயன்ற போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
கோவை அன்னூர் மேட்டுப்பாளையம் சாலைக்கு இடையில் சிட்டி யூனியன் பேங்க் உள்ளது. அதன் வாசலில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று பணம் உள்ள பகுதியை உடைத்து பணத்தை திருட முயன்றார். அப்பொழுது திடீரென அலாரம் ஒலித்ததால் திருடன் அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து, உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள இரவு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் வங்கி மேலாளருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி கேமரா உட்பட அனைத்து தடயங்களையும் ஆய்வு செய்து திருடனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.