கோவை: கொரோனா 2வது அலை காரணமாக கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
கோவை: கொரோனா 2வது அலை காரணமாக கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கனிகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவில், புளியகுளம் விநாயகர் கோவில், சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புளியகுளம் விநாயகருக்கு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட கனிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனிடையே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசின் பாதுகாப்பு விதிகள் அமலில் உள்ளதால் கோனியம்மன் மற்றும் புலியகுளம் விநாயகர் கோவில்களில் குறைந்த அளவிலான பக்தர்கள் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்தபடியாக கோவையில் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கோவையில் வசிக்கும் திரளான மலையாளிகள் முக கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பிறகே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதே போல், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விஷூ கொண்டாட்டத்திற்காக கேரளா செல்லும் கேரள மக்கள், கோவையிலேயே கொண்டாடினர்.