கோவையில் வாக்கு எந்திரம் வைத்துள்ள கல்லூரிக்குள் திடீரென நுழைந்த மொபைல் வாகனம். திமுக வேட்பாளர்கள் நேரில் ஆய்வு; பரபரப்பு.
கோவை: கோவை சட்டமன்ற தேர்தல் 10 தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்துக்குள்வைக்கப்பட்டு ஒவ்வொரு அறையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
வருகிற மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து 24 மணி நேரமும் ஜிசிடி கல்லூரி வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சிமுறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், செவ்வாய் இரவு 10 மணி அளவில் அந்த கல்லூரிக்குள் ஒரு மொபைல் வேன் மற்றும் சாதாரண வேன் ஒன்றும்உள்ளே அனுமதிக்கப்பட்டது. இதை பார்த்த, சந்தேகம் அடைந்த திமுக பிரமுகர்கள் திமுக வேட்பாளர்களான நா. கார்த்திக், சண்முகசுந்தரம், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் வேட்பாளர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர். உடன் கட்சிக்காரர்களும் வந்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டரிடம், புதியதாக உள்ளே மொபைல் வேன் வந்துள்ளது குறித்து விசாரித்தனர். அதற்கு அந்த சப்-இன்ஸ்பெக்டர் பெண் காவலர்கள் பணி புரிவதால் அவர்கள் பாத் ரூம் செல்வதற்காக டாய்லெட் இணைக்கப்பட்ட மொபைல் வேன் வரவழைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
உடனடியாக கட்சியினர் மூலமாக அந்த இரண்டு வேன்களும் திறக்கப்பட்டு அனைத்து பகுதிகளையும் சோதிக்கப்பட்டது. அங்கு எந்தவிதமான பொருள்களும் இல்லை, குறிப்பாக வாக்கு இயந்திரம், சம்பந்தமான பொருட்களை கிடையாது என்பது உறுதி செய்த பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இடம் வேட்பாளர்கள் கல்லூரியில் கழிப்பிட வசதி இல்லையா? எதற்காக திடீரென மொபைல் உள்ளே வந்தது? அதை ஓட்டி வந்த டிரைவர் எங்கே சென்றார்? தேர்தல் அதிகாரியான கலெக்டர் இடம் இதற்கு அனுமதி பெற்று உள்ளீர்களா? இந்த வேனுக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த நிகழ்ச்சி நம்பும்படியாக கிடையாது. அதனால் இரண்டு வேளையும் வெளியே அனுப்பும்படி கூறினார்.

பின்னர், அந்த இரண்டு வேனையும் வெளியே அனுப்பிய பிறகு வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலைந்து சென்றனர்.அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் உடைய முகவர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து போலீசாருடன் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், இரண்டு மணி நேரம் கல்லூரி வாசலில் பரபரப்பு நிலவியது. எதற்காக இப்படி இரவு நேரத்தில்வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்தேகிக்கும் படியாக வாகனங்கள் வந்தன என்று முணுமுணுத்தபடி வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர சென்றனர்.