கொரோனா பரவலை தடுக்க வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை!

கோவை: கொரோனா பரவலைத் தடுக்க வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோவை நுகர்வோர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கொரோனா பரவலைத் தடுக்க வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோவை நுகர்வோர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்க(CAPA) தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:

“தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை வரவேற்கிறோம்.இருப்பினும் எங்கள் சங்கம் சார்பில் சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் உள்ளிட்ட அனைத்து வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை தினங்களில் முழுவதும் மூடப்பட வேண்டும்.

வார நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்படுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில்களில் இரவு 8:00 மணி வரை மட்டுமே மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கடற்கரைக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி கடிதம் எழுதியிருக்கின்றோம். நாங்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...