கோவை தொழில் நிறுவனங்களில் ஒரு வாரத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி!

கோவை: கோவை தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த ஒரு வாரத்தில் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.


கோவை: கோவை தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த ஒரு வாரத்தில் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. தவிர 100 ஊழியர்களுக்கு மேல் பணியாற்ற கூடிய தொழில் நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவதுடன், பணி நேரத்தில் அவர்களுக்கு தேவையான சிறப்பு அனுமதி, போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

ஒரு சில தொழில் நிறுவனங்கள் சிறப்பு முகாம் நடத்தி தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

'எல்ஜி அல்ட்ரா இண்டஸ்ட்ரீஸ்' மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் செந்தில்குமார், முருகேசன் ஆகியோர் கூறுகையில், " நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்கள் நிறுவனத்தில் இன்று மட்டும் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலை சரியாக பின்பற்ற வேண்டியது அனைவரின் கடமை,” என்று கூறினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...