கோவை: கோவில்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த 10ம் தேதி முதல் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.
அதன்படி கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். முக்கிய பூஜைகளில் அந்தந்த கோயில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
திருமண விழாக்களில் பங்கேற்போர் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.