கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பேசி தாக்கிகொலைமிரட்டல் விடுத்த மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை குனியமுத்தூர் அருகே ஆசாத் நகரைச் சேர்ந்த புரோஸ்கான்( 30), முகமது ரவி (32), வெற்றிலை கார வீதியைச் சேர்ந்த ராமன்( 31) ஆகிய நண்பர்கள் மூன்று பேரும்பாலக்காடு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் வழக்கம்போல மது குடித்தனர்.
போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற குனியமுத்தூர் போலீசார் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன்,இங்கு நின்று கொண்டு என்ன செய்கிறீர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், சப் இன்ஸ்பெக்டரிடம் உன்னால் முடிந்ததை செய் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு எதிராக தகாத வார்த்தைகள் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.