கோவை: அரக்கோணத்தில் தேர்தல் முன்பகை காரணமாக இருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீஒமு, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்க அமைப்பினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற பொதுத் தேர்தலில், வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட முன்பகையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு தலித் இளைஞர்கள், அரக்கோணம் ராணிப்பேட்டை பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகே மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தலித் இளைஞர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா,ஊரக உள்ளாட்சித் துறை சங்க பொது செயலாளர் கே.ரத்தினகுமார், தமுஎகச மாநில குழு உறுப்பினர் அ.கரீம், மற்றும் சிபிஎம் கிழக்கு நகர குழு உறுப்பினர் த.நாகராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். திரளானோர் பங்கேற்று இரட்டை படுகொலையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.