விசு பண்டிகை, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விற்பனை அதிகரிப்பு!

வால்பாறை: விசு பண்டிகை, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விற்பனை அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வால்பாறை: விசு பண்டிகை, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விற்பனை அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள எல்லையை ஒட்டி உள்ள தமிழக எல்லைகளில் விசு பண்டிகையும், தமிழகத்தில் தமிழ் புத்தாண்டும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக விசு பண்டிகையின்போது கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள், கணிகொன்ன என்ற மஞ்சள் பூ மற்றும் பூக்கள் மாலைகள் பழங்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம்.

விசுவுக்கு முதல் நாள் இரவு சாமி அறையை சுத்தம் செய்து ஐந்துமுக விளக்கேற்றி கிருஷ்ணர் படங்களை மாலைகளால் அலங்கரித்து தலை வாழையில் தேங்காய் வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் ஆரஞ்சு திராட்சை பழங்களை வைத்து அலங்காரம் செய்கின்றனர்.

காலையில் எழுந்து குளித்து முடித்து பாரம்பரிய உடை உடுத்தி இரண்டு கைகளால் கண்களை மூடியபடி சாமி அறைக்கு சென்று கிருஷ்ணரை தீபாராதனையுடன் வழிபடுகின்றனர் தொடர்ந்து வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கைநீட்டம் வாங்குகின்றனர்.

அதன் பின்னர் காலை உணவு உண்டு விழாவை கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சுவாமிக்கு பழங்கள் படைத்து வழிபடுவது வழக்கம்.



இதன் காரணமாக வால்பாறை பகுதியில் பழ கடைகள் பூ கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...