குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பார்க் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சுற்றி அதிகளவிலான வனப்பகுதிகள் உள்ளன. எனவேகரடி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் காட்டுக்குள் இருந்து அவ்வப்போது நகர்ப் பகுதியில் உலா வருவது வழக்கமாக உள்ளது.

அண்மையில் சிம்ஸ் பார்க் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றைக் காட்டெருமை அப்பகுதியிலேயே நீண்ட நேரமாகப் உலா வந்து கொண்டிருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த காட்டெருமையை வனத் துறையினா் அடர்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். எனினும் வனத்துறையினர் அதனை கண்டுகொள்ளவில்லை.
குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை தாக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியே நடமாட அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.