கோவை: ஆழியாறு அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்போருக்கு திமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. திமுக சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இதனடிப்படையில் கோவை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக, ஆழியார் அருகே உள்ள காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பகத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான, கபசுர குடிநீர், முக கவசங்களும் வழங்கப்பட்டன.
மேலும் முதியோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகப்பிரியா சீனிவாசன், தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முதியவர்களுக்கு முக கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மாணவரணி மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.