கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் தடுப்பணையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதி மாசடைந்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சிக் கடைகளில் வீணாகும் கோழி கழிவுகளை இரவு நேரத்தில் தாமரைக்குளம் தடுப்பணை பகுதியில் சிலர் கொட்டி செல்கின்றனர்.

இதனால் தடுப்பணை அருகே துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக் கழிவுகள் குவிந்து காணப்படுவதால் தடுப்பணை முழுவதும் மாசடைந்துள்ளது.

மழைக்காலங்களில் இறைச்சிக் கழிவுகள் தடுப்பணை தண்ணீரில் கலப்பதால் தண்ணீரும் மாசடைகிறது.
எனவே இறைச்சி கழிவுகளை கொட்ட தடைவிதிப்பதுடன் கழிவுகளை கொட்டுவோர் மீது தாமரைக்குளம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.