கோவை: விஷூ பண்டிகைக்காக கடந்த 5 நாட்களில் மட்டும் கோவையிலிருந்து 15 டன் பூ, பழம், காய்கறிகள் ஷார்ஜாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.

விஷு பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் வாழும் கேரள மக்கள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்த ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானத்தில் அதிக அளவிலான பூ, பழம் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. விஷூ பண்டிகையை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 15 டன் எடையிலான பூ, பழம், காய்கறிகள் ஷார்ஜாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
பொதுவாக இந்த விமானத்தில் காய்கறிகள் தவிர இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்பொழுது விஷு பண்டிகை காரணமாக கடந்த 5 நாட்களில் பூ, பழம் மற்றும் காய்கறிகள் மட்டுமே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.