மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்!

கோவை : மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கு கோவை தொழில் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.


: கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கு கோவை தொழில் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.

கொரோனா நோய்த்தொற்று பரவல் அனைத்து தொழில் துறையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகிறது.

இதனால் கோவையில் உள்ள பல்லாயிரக்கணக்கான 'எம்எஸ்எம்இ'தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையை எதிர் கொள்ளும் நோக்கில் கோவையில் இன்று மாலை பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

இது குறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறுகையில், “இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவிப்பதோடு, மத்திய அரசின் கவனத்திற்கு பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தவிர இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் நோக்கில் கோவையில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான தொழில் அமைப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்,”என தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை கிளை, கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை திருப்பூர் மாவட்ட ஊரக மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம், தேசிய பவுண்டரி சங்கம் (IIF) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...