பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைவு - குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே அனுமதி!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக குரங்கு அருவி மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகு குரங்கு அருவி திறக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அருவிக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. இதனால் குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது குரங்கு அருவி நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, அருவி வெறும் பாறைகளாக காட்சியளிக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அருவிக்கு தற்போது குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், நோய் கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...