பொள்ளாச்சியில் 7 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது பெற்று சாதனை - பெற்றோர்கள் மகிழ்ச்சி!

பொள்ளாச்சியில் 7 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியில் 7 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.

பொள்ளாச்சி எஸ்.வி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் - மீனாட்சி இவர்களின் மகள் வர்ணா (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் வேகமாக எழுதக்கூடிய திறமை கொண்ட சிறுமியிடம் துரிதமாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருப்பதை கண்ட பெற்றோர்கள் சிறுமி வர்ணாவின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்தனர்.

வர்ணா நன்றி என்கிற வார்த்தையை 9 மொழிகளில் கூறும், 5 மொழிகளில் மெல்லிய குரலில் பாடல்களைப் பாடும் திறமை, மற்றும் 100யில் இருந்து 1 வரை எண்களை தலைகளாக ஒரு நிமிடத்தில் எழுதிய திறன் கொண்ட மாணவி வர்ணாவின் வீடியோவை அவரது பெற்றோர்கள் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், சிறுமி வர்ணாவின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து மாணவி வர்ணாவிற்க்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு விருது கிடைத்துள்ளது.



இதுகுறித்து மாணவியின் தாயார் மீனாட்சி கூறியதாவது, என்னுடைய மகள் வர்ணா வாஞ்சிநாதன் சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் பதிவாகியுள்ளது.

ஒன்பது மொழிகளில் அவள் நன்றி சொல்லியுள்ளாள், ஐந்து மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளாள், 12 திருக்குறளுக்கு மேல் கூறியும். மேலும்

ஒன்று முதல் நூறு வரை இறங்கு வரிசையில் எழுதியுள்ளார். இரு பரிணாம படங்கள், முப்பரிமாண படங்களை 42 வினாடிகளில் முடித்துள்ளார். இதெல்லாம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்துள்ளது.

இன்னும் குறைந்த கால நேரத்தில் 7 வயது சிறுமிக்கு நாங்கள் இன்னும் குறைந்த நேரத்தில் சொல்வதற்கு பயிற்சிகள் கொடுத்து வருகிறோம். அதேபோல், கலையில் பரத நாட்டியமும் பயின்று வருகிறாள். இதில் நிறைய முத்திரைகள் உள்ளது. அதில் ஐம்பது விநாடிக்குள் அனைத்து முத்திரைகளையும் சொல்ல வேண்டும் என்றும் கின்னஸ் சாதனைக்கு பயிற்சி அளித்து வருகிறோம். என்னுடைய மகளும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாள் என்று நம்புகிறேன் என தாயார் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...