கோவை : பேக்கரியில் மார்ச் 29 -ம் தேதி போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
: கோவை: பேக்கரியில்மார்ச் 29 -ம் தேதி போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில், சாப்பிட்டவர்களை தாக்கிய உதவி ஆய்வாளர் முத்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக்கோரிஉணவக உரிமையாளர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் இச்சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்பேக்கரியை மூடச்சொல்லி உதவி ஆய்வாளர் உரிமையாளரை தாக்கி இழுத்துச் செல்லும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படாத கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பேக்கரியை மூடச் சொல்லி விட்டு,குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ் , பேக்கரி உரிமையாளரை தாக்கி விட்டு, அடித்து இழுத்து சென்றிருக்கிறார்.
அப்போது பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு 11 மணி வரை பேக்கரி நடத்த அனுமதி இருந்தும் 10.30 மணியளவில் உரிமையாளரை தாக்கி அடித்து இழுத்துச் செல்லும்,இது போன்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
கோவையின் பெரும்பான்மையான காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் வணிக உரிமையாளரை தாக்குவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.