வால்பாறை: வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்றுநடமாடி வருகிறது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் வனத்துறை குழுவினர் வாழைத்தோட்ட பகுதி அருகே உள்ள நல்ல காத்து எஸ்டேட் தேயிலை காட்டு பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.

மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.